Homeஆன்மீகம்அட்சய திருதியை என்றால் என்ன? | அட்சய திருதியை நாளின் சிறப்புகளும் மற்றும் அன்றைய தினம்...

அட்சய திருதியை என்றால் என்ன? | அட்சய திருதியை நாளின் சிறப்புகளும் மற்றும் அன்றைய தினம் என்ன செய்ய வேண்டும்?

THATSTAMIL-GOOGLE-NEWS

அட்சய திருதியை என்றால் என்ன? | அட்சய திருதியை நாளின் சிறப்புகளும் மற்றும் அன்றைய தினம் என்ன செய்ய வேண்டும்?

இந்த வருடம் அட்சய திருதியை ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. ஆனால் இம்முறை ஏப்ரல் 22 ஆம் தேதி அட்சய திருதியை திதி வந்து விடுகிறது. அதாவது ஏப்ரல் 22 ஆம் தேதியே அட்சய திருதியை தொடங்கி விடுகிறது.

 

அட்சய திருதியை

  • அட்சயம் என்றால் தேயாது, குறையாது வளர்தல் என்று பொருள்படும். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும் வளர்பிறை திருதியை நாளை அட்சய திருதியை நாளாக கொண்டாடுகிறோம்.

அள்ள அள்ள குறையாமல் செல்வத்தை அள்ளித்தரும் சிறப்புமிக்க திருநாளாக அட்சய திருநாள் போற்றப்படுகிறது. இன்றைய தினத்தில் ஏழைகளுக்கு தானம் செய்தால் அது பல மடங்கு உங்களுக்கு செல்வம் மற்றும் புண்ணியத்தை பெற்று தரும்.

அட்சய திருதியை அன்று என்ன வாங்க வேண்டும் ?

அட்சய திருதியை  Akshaya thiruthi 2023 in tamil

 

அட்சய திருதியை நன்னாளில் தங்க நகை வாங்கினால் அது பல மடங்காக பெருகும் என்று கூறப்படுகிறது. எனவே தங்கம் வாங்க சிறந்த நாளாக அட்சய திருதியை நாள் விளங்குகிறது.

புதிய பொருட்களை வாங்குவது சிறப்பு.

அதே சமயத்தில் அட்சய திருதியை நன்னாளில் தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். அவர்களுக்கு தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அன்றைய தினத்தில் நாம் தொட்டது துலங்கும்.

அட்சய திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்களுக்கும் சென்றடையும் என்று கூறப்படுகிறது. பித்ரு தர்ப்பணம் செய்பவர்களுக்கு வறுமை நீங்கி வளமான வாழ்வு அமையும்.

அட்சய திருதியை நன்னாளில் பிறருக்கு நீர்மோர் மற்றும் பானகம், தண்ணீர் தானம் வழங்குவது மிகச் சிறப்பு.

அட்சய திருதியை பற்றிய பல சிறப்புகளை ஜோதிட சாஸ்திரம் மற்றும் புராணங்கள் கூறுகிறது. வாருங்கள் நண்பர்களே, அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும் ?

அட்சய திருதியை Atchaya thiruthi 2023 in tamil

 

நல்ல காரியங்களை இந்த தினத்தில் தொடங்கலாம்.

இல்லாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து வந்தால் இந்த தினத்தில் தெய்வ அருளை நீங்கள் பெறலாம். இது மட்டுமல்லாமல் மறுபிறவியில் உங்களுக்கு ராஜயோக வாழ்க்கை அமையும்.

இந்த தினத்தில் பூமி பூஜை போடுவது சிறப்பு.

இந்த தினத்தில் புதிய கலையினை கற்க ஆரம்பிப்பது சிறப்பு.

இன்றைய தினத்தில் தான தர்மம் செய்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மரண பயம் நீங்கி உடல்நலம் மேம்படும்.

அன்னதானம் செய்வதால் விபத்து விலகும்.

ஏழை குழந்தைகளின் கல்விக்கு நீங்கள் உதவினால் உங்களது குழந்தைகளின் கல்வி மேம்படும்.

அட்சய திருதியை நன்னாளில் ஏழைகளுக்கு தானம் செய்தால் அது பல மடங்கு புண்ணியத்தை உங்களுக்குப் பெற்றுத் தரும்.

அட்சயம் என்றால் வளரக்கூடியது (அதாவது நிறை) மற்றும் அழியாதது என்பது பொருள்.

நிறைவை வழங்கும் திருதியை அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. இந்த நன்னாளில் தேவி ஸ்ரீ மகாலட்சுமியுடன் இணைந்த ஸ்ரீமத் நாராயணனை வழிபட்டால் குறைவற்ற செல்வத்தையும் வாழ்வையும் பெறலாம்.

அட்சய திருதியை தினத்தில் வேதம் ஓதுபவர்களுக்கு உணவளித்தால் செல்வம் பெருகும். இந்த நன்னாளில் நெல், அரிசி, தங்கம், பசுமாடு ஆகியவற்றை தானம் செய்வது சிறப்பு.

பவிஷ்ய புராணமானது இந்த அட்சய திருதியை தினத்தில் உடுக்கை உடை, நீர்மோர், தயிர் சாதம், குடை, பானகம், விசிறி போன்றவற்றை தானமாக அளித்தால் கொடுப்பவருக்கு அது செல்வமாக பல மடங்கு பெருகும் என்று கூறுகிறது. இது மட்டுமல்லாமல் புண்ணியங்களும் உங்களை வந்தடையும்.

அட்சய திருதியை நன்னாளில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள்

வியாசக மகரிஷி மகாபாரத கதையை விநாயகப் பெருமானுக்கு இந்த அட்சய திருதியை நாளில் தான் சொல்லத் தொடங்கினார்.

இந்த அட்சய திருதியை தினத்தில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் பகவானை வழிபட்டு தாகத்துக்கு நீர் கொடுக்கும் கிணறு தோண்டும் பணியை செய்கின்றனர்.

இந்த நன்னாளில் மதுரை மீனாட்சி அம்மை சுந்தரேஸ்வரர் சுவாமியை திருமணம் செய்து கொண்டார்.

சிவபெருமான் தன்னை வணங்கும் பக்தர்களின் பசியை போக்குவதற்காக அன்னபூரணி தேவியிடம் சென்று உணவைப் பெற்று பக்தர்களுக்கு கொடுத்தார்.

இந்த அட்சய திருதியை தினத்தில் தான் படைப்பு கடவுளான பிரம்மதேவர் இந்த உலகத்தை படைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

பகவான் விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் ஜமக்கனி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் மகனாக பிறந்தார்.

இந்த அட்சய திருதியை நன்னாளில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் நெல்மணியை பூமியில் விதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை நோயுற்றவர்களின் அருகில் அமர்ந்தபடி தண்ணீரை வைத்து ஜபம் செய்துவிட்டு, விபூதி இட்டு கொடுத்தால் அதன் வீரியமும் தாக்கமும் குறைந்து உடல்நலம் மேம்படும். இந்த அமிர்த சஞ்சீவினி மந்திரம் தொடங்கப்பட்டதும் இந்த அட்சய திருதியை தினத்தில் தான்.

இந்த அட்சய திருதியை தினத்தில் பகீரதன் என்ற சூரிய குலத்து மன்னன் பூமியில் நீர் வறண்டு பஞ்சம் ஏற்பட்ட தருணத்தில் வானுலகத்திலிருந்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார்.

கிருத யுகத்தில் புனித ஆன்மாக்களும் தவசீலர்களும் அவதரித்தது இந்த அட்சய திருதியை தினத்தில்தான்.

இந்த அட்சய திருதியை நன்னாளில்தான் சூரிய பகவானின் கையில் இருந்து அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை திரௌபதி தேவி பெற்றுக் கொண்டாள்.

இந்த தினத்தில் தான் முதன்முதலாக தெய்வ சிலைகளும், பரிகார ஹோமங்களும் தொடங்கப்பட்டன.

இதையும் படிக்கலாமே,

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments